தேவகோட்டை அருகே குளத்தில் தவறி விழுந்தவர் பலி!

     -MMH
      தேவகோட்டை அருகே உள்ள நாச்சாங்குளம் பஞ்சாயத்து பாரதி வேளாங்குலத்தைச் சேர்ந்தவர் முருகன்(52). இவரது மனைவி வள்ளி. இவர்களுக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர்.

முருகன், நேற்று முன்தினம் மாலையில் தேவகோட்டையில் உள்ள சிலம்பணி ஊரணிக்குச் சென்றுள்ளார். இரவு வரை அங்கிருந்த திண்டு ஒன்றில் அமர்ந்திருந்துள்ளார். திடீரென ஊரணியில் தவறி விழுந்ததில் அவர் உயிர் பிரிந்தது.

இவரது சடலம் ஊரணியில் மிதப்பதைக் கண்ட அங்கிருந்த பொதுமக்கள், தேவகோட்டை காவல் நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். அதன் பேரில் அங்கு வந்த காவல்துறையினர், தீயணைப்புத்துறையினர் உதவியுடன் அவரது சடலத்தை அங்கிருந்து மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

- சங்கர், தேவகோட்டை.

Comments