தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று திருப்பூர் கோவை வருகை..!!

 

-MMH

   தமிழகத்திலுள்ள 18 வயதுக்கு மேல் இருப்பவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். தமிழகத்தில்  கொரோனா நோய்த்தொற்றை  கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கட்டுப்பாடு அமுலில் உள்ள இச்சூழ்நிலையில், சேலம், ஈரோடு திருப்பூர் மற்றும் கோவை மாவட்டங்களில் முதலமைச்சர்  ஸ்டாலின் அவர்கள் நேரில் ஆய்வு செய்ய வருகிறார்.

சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள், சுகாதாரத்துறை அதிகாரிகள், மருத்துவ நிபுணர்கள் மாநகராட்சியின் நிர்வாகிகள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் தற்போது சிகிச்சை அளிக்கப்படும் விவரங்களை தெரிந்து கொள்ளவும், மேலும்  தேவையான வசதிகளை செய்து கொடுக்கவும். நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசனை வழங்க உள்ளார்.

கொரானா தொற்று பரவல் காரணமாக முழு ஊரடங்கு அமலில் இருப்பதால், இன்று முதல்வர்  வருவதையொட்டி, காவல்துறையினர்  தேவையான பாதுகாப்புகளை ஏற்பாடு செய்யவும், பொதுமக்களும் கட்சி தொண்டர்களும் கூட்டம் சேர வேண்டாம் என்றும் திருப்பூர்  மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன் அறிவுறித்தி உள்ளார்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-குமார் ஊத்துக்குளி.ஈசா.

Comments