கட்டுப்பாட்டை இழந்த கார் அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்..!!

 

-MMH

        கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரோடு சிட்கோ எல் ஐ சி காலனி எதிர்புறம் இன்று காலை அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று தடுப்பு சுவர் மீது மோதியதால் அங்கு பயணித்த சக பயணிகள் அதிர்ச்சிக்கு உள்ளாகினர். கொரோனாஎன்னும் கொடிய நோய் தாக்கி பல உயிர்கள் இழந்து வாடும் நிலையில் அரசு பொது முடக்கம் அறிவித்தும் தேவையில்லாமல் வெளியே சுற்றித் திரியும் மக்களை கண்காணிக்கும் காவல்துறை ஒருபுறமிருக்க.

சுமார் ஒரு மணி அளவில் அந்த பகுதியில் வந்த சொகுசு கார் ஒன்று எதிர்பாராதவிதமாக தடுப்பு சுவற்றில் மோதி பெரும் சேதத்திற்கு உள்ளானது இதை கவனித்த வாகன ஓட்டிகள் காருக்கு ஏற்பட்ட விபத்தை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாககாரில் இருந்தவர்களை இறங்கச் சொல்லி உதவி செய்த வாகன ஓட்டிகள் உயிர்ச்சேதம் ஏதும் நடைபெறவில்லை என்றும் வாகனத்தை ஓட்டி வந்தவர்கள் மது அருந்தி இருக்கலாம்  கூறப்படுகிறது.

இதுபோன்ற கவனக்குறை வினால் சக வாகன ஓட்டிகளுக்கு விபத்தை ஏற்படுத்தும் வகையில் இந்த விபத்து நடைபெற்றது என்றும். வாகன ஓட்டிகளும் சமூக ஆர்வலர்களும் கருத்து தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-ஈசா ஆரோக்கியராஜ்.

Comments