ஸ்டெர்லைட்: தொடங்கியது ஆக்ஸிஜன் விநியோகம்!

      -MMH
      இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் கடுமையாக அதிகரித்து வந்த நிலையில், நாட்டின் பல பகுதிகளில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடும் ஏற்பட்டது. இந்த நிலையில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து ஆக்ஸிஜன் உற்பத்தி செய்வதற்கு உச்ச நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதனை கண்காணிப்பு குழு கண்காணிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

ஸ்டெர்லைட் ஆலை

இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையில் நேற்று இரவில் ஆக்ஸிஜன் உற்பத்தி தொடங்கியது.

முன்னதாக கண்காணிப்பு குழுவினர் ஆலையில் ஆய்வு செய்தனர், ஆக்ஸிஜனை வெளியில் கொண்டு செல்வதற்கு வசதியாக டேங்கர் லாரிகளும் ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு வரப்பட்டது. இன்று காலை ஆலையில் தயாரிக்கப்பட்ட ஆக்ஸிஜனை மருத்துவமனைகளுக்கு அனுப்பும் பணி தொடங்க்யுள்ளது. 

-சுரேந்தர்.

Comments