வணிகர் தினத்தன்றும் கடைகள் வணிக நிறுவனனகள் திறந்திருக்கும்!!

     -MMH

சென்னை: ஒவ்வொரு ஆண்டும் மே 5 ஆம் தேதி வணிகர் தினமாக கொண்டாடப்படுகின்றது. வணிகர் தினத்தன்று வழக்கமாக கடைகள் வணிக நிறுவனனகள் மூடப்படுகின்றன. எனினும், இந்த ஆண்டு இன்று வணிகர் தினமாக இருந்தாலும், கடைகள் திறந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

இந்த நிலையில், இன்று மக்கள் தேவையான பொருட்களை வாங்கிக்கொள்வதை ஏதுவாக்க இன்று கடைகளை மூட வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு (Tamil Nadu) வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தலைவர் ஏ.எம். விக்ரமராஜா கூறியுள்ளார்.

மே 5 ம் தேதி, சலூன்கள், மலர் விற்பனையாளர்கள் மற்றும் சலவைத் தொழிலாளிகளுக்கு மளிகைப் பொருட்களின் பொட்டலங்கள் விநியோகிக்கப்படும் என்றும் அவர் கூறினார். இந்த பேரிடர் நேரத்தில் சிக்கித் தவிக்கும் அவர்களுக்கு முடிந்த அளவில் உதவ இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார் .

பெரும்பாலான மளிகைக் கடைகள் மூன்று நாட்கள் முதல் ஒரு வாரம் வரையிலான சரக்குகளை மட்டுமே வைத்திருக்கும் என்று ஒரு வியாபாரி தெரிவித்தார். அவர்களிடம் சரக்குகளை சேமித்து வைக்க பெரிய இடங்கள் இல்லாமல் இருப்பதால், சிறிய கடைகளால் பெரிய அளவில் சரக்கை வைத்திருக்க முடியாது. பல்பொருள் அங்காடிகள் மூடப்பட்டால் பிஸ்கெட்டுகள் போன்ற பொருட்களுக்கு உடனடி தட்டுப்பாடுகள் ஏற்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.

மே 6 முதல் தமிழகத்தில் புதிய கோவிட் கட்டுப்பாடுகள்: எதற்கு அனுமதி உண்டு? எதற்கு இல்லை? மற்றொரு வணிகர் தெரிவிக்கையில், காலை 6 மணி என்றிருக்கும் கால அளவை 7 மணியாக்கி மதியம் கடைகள் மூடும் நேரத்தை 1 மணியாக்கினால் அனைவருக்கும் வசதியாக இருக்கும் என்றார். பள்ளிகளுக்கும் இப்போது விடுமுறை என்பதால், மக்கள் பொதுவாக 6 மணியளவில் கடைகளுக்கு வருவதில்லை என்றார் அவர்.

தமிழ்நாடு எஃப்.எம்.சி.ஜி விநியோகஸ்தர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் கணேஷ்ராம், நாளின் விற்பனை முடிந்தவுடன், வர்த்தகர்கள் சரக்குகளை சரி பார்த்து சேமித்து வைக்கும் பணிகளை செய்ய, அவர்களுக்கு மாலை 3 மணி வரை அரசாங்கம் அனுமதி அளிக்கலாம் என்று ஆலோசனை கூறினார்.

இப்படி செய்தால், எந்த பதட்டமும் இல்லாமல், மக்களுக்கு தேவையான பொருட்களை வணிகர்களால் தயார் நிலையில் வைத்திருக்க முடியும். சில பொருட்கள் மூன்று நாட்களுக்கு ஒரு முறையும், சில பொருட்கள் வாரத்திற்கு ஒரு முறையும், சில 15 நாட்களுக்கு ஒரு முறையும் நிரப்பப்படுகின்றன என்று அவர் விளக்கினார்.

நுகர்வோர் ஆர்வலர் டி.சடகோபன், கடந்த ஆண்டு ஊரடங்கிலிருந்து (Lockdown) அரசாங்கம் அதன் படிப்பினைகளைக் கற்றுக் கொண்டு அதற்கேற்ப நேரக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்திருக்க வேண்டும் என்றார். இந்த கட்டுப்பாடுகளுக்கு (Restrictions) லாக்டவுன் என்ற பெயர் மட்டும்தான் இல்லை. பொது விநியோக முறை மூலம் அரசாங்கமே தேவையில் இருக்கும் மற்றும் நலிந்த குடும்பங்களுக்கு இலவச மளிகைப் பொருட்களை வழங்கலாம் என்றும் தெரிவித்தார்.

-சுரேந்தர்.

Comments