கொரோனா நிவாரண நிதிக்காக எம்பி கனிமொழியிடம் உண்டியல் பணத்தை வழங்கிய சிறுமி..!!

 

-MMH

         தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பாண்டவர்மங்கலம், சண்முகசிகாமணி நகரில் உள்ள ரேஷன் கடையில் நேற்று அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதாஜீவன், மாவட்ட கலெக்டர் செந்தில் ராஜ்  ஆகியோர் பங்கேற்றனர். அப்போது அங்கு வந்த கோவில்பட்டி ராஜிவ்நகர் 2வது தெருவை சேர்ந்த நாகராஜன் மகள் ரிதானா (வயது 13)  தான் சேமித்து  வைத்த உண்டியல் பணத்தை ரூ 1,970 யை முதலமைச்சரின் கொரோனா நிவாரண நிதிக்கு கனிமொழி எம்.பி.யிடம் வழங்கினார். 

அதனுடன் அந்த குழந்தை முதல் அமைச்சருக்கு ஒரு உருக்கமான கடிதம் ஒன்றையும் வழங்கினார். அந்த கடிதத்தில் தான் சிறுக சிறுக சேமித்த பணம் இது. எனது தந்தை மருத்துவ செலவுக்காக நான் சேர்த்த பணத்தை  நிவாரண நிதிக்கு அளித்துள்ளேன். எனது தந்தை எதிர்பாராதவிதமாக மாரடைப்பால் இறந்து விட்டார். என்னை மாதிரி இன்னொரு குழந்தை தந்தையையோ, தாயையோ இழக்காமல் இருக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் என அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.  முதலமைச்சர் நிவாரண நிதி காக கொரோனா நிதி வழங்கிய சிறுமியை கனிமொழி எம்.பி உள்ளிட்ட அனைவரும் பாராட்டினார்கள்.

நாளை வரலாறு செய்திகளுக்காக 

-வேல்முருகன்,தூத்துக்குடி. ஈசா.

Comments