கோல்ப் மைதானத்தில் அனில் அம்பானி வாக்கிங் சென்றதால் அரசு மைதானத்தை மூட அரசு உத்தரவு!!

  -MMH

மகாராஷ்டிராவில் லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் அமலில் உள்ள நிலையில், கோல்ப் மைதானத்தில் அனில் அம்பானி வாக்கிங் சென்றதால் அரசு மைதானத்தை மூட அரசு நிர்வாகம் உத்தரவிட்டது.

மகாராஷ்டிராவில் அமைந்துள்ள மகாபலேஷ்வர் அனைத்து பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட பரந்த பூமியாகும். இது புனேவிலிருந்து 120 கி.மீட்டர் தொலைவிலும், மும்பையிலிருந்து 280 கி.மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திரா முழுவதும் பாயும் கிருஷ்ணா நதியின் மூலமே மகாபலேஷ்வர்தான்.

மகாபலேஷ்வர் பிரபலமான மலைவாச தலமான மகாபலேஷ்வரில் பிரிட்டிஷ் காலத்தில் உருவாக்கப்பட்ட தனியார் கோல்ப் மைதானம் உள்ளது.

இந்த மைதானத்தில் சாயந்திர நேரத்தில் பிரபல தொழிலதிபர் அனில் அம்பானி தனது மனைவியுடன் நடைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். அவர்கள் நடந்து செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலானது. கொரோன பரவல் காரணமாக லாக்டவுன் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், இது போன்ற நடவடிக்கைகளுக்கு (பொது இடங்களில் நடைபயிற்சி) அனுமதி கிடையாது.

 மனைவியுடன் நடந்து செல்லும் அனில் அம்பானி இதனால் அனில் அம்பானி கோல்ப் மைதானத்தில் வாக்கிங் சென்ற விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, தற்போதைய கட்டுப்பாடுகளின்போது, காலை அல்லது மாலை நடைபயணங்களுக்க மக்கள் அங்கு வருவதை நிறுவனம் தடை செய்யாவிட்டால்,பேரிடர் மேலாண்மை சட்டம், இந்திய தண்டனை சட்டம் மற்றும் தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த கோல்ப் மைதானதுக்கு மகாபலேஷ்வர் கவுன்சில் தலைமை அதிகாரி நோட்டீஸ் அனுப்பினார். இதனையடுத்து அந்த கோல்ப் மைதானத்தை நிர்வாகம் மூடியது.

-சுரேந்தர்.

Comments