உதிர்த்தது உதயசூரியன் மகிழ்ச்சியில் தமிழகம்..!!

     -MMH
     பத்து  ஆண்டுகளுக்கு பிறகு உதித்தது சூரியன்! கடந்த பத்தாண்டுகளாக  தமிழகத்தில் ஆட்சி அமைத்தது அதிமுக அரசு. தற்போது அதிமுகவுக்கு பெரும்பான்மை கிடைக்கவில்லை. திமுக 125 இடங்கள் பெற்று தனி பெரும்பான்மையாக  உள்ளது. காங்கிரஸ் 18 இடங்களும், விடுதலை சிறுத்தை கட்சி 4 இடம், மதிமுக 4 இடமும்  மற்றவை 3 இடமும் ஆக 159 இடங்கள் பெற்று வெற்றி பெற்றுள்ளது.

தற்போது முதலமைச்சராக பொறுப்பேற்க உள்ள மு.க. ஸ்டாலின் அவர்கள் கூறும் பொழுது  "தமிழகம் பத்தாண்டுகளாக பாதாளத்தில் உள்ளது. அதனை சரி செய்யவே  நான் வந்துள்ளேன். மக்கள் என்னை வெற்றி பெறச் செய்துள்ளனர். 

மு.க  ஸ்டாலின் அவர்கள் தனது அப்பாவும் முன்னாள் முதலமைச்சருமாகிய கருணாநிதி அவர்களின் நினைவிடத்துக்கு சென்று உள்ளார். மு.க ஸ்டாலின் அவர்கள் வரும் 7-ம் தேதி அன்று கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் அனைத்து எம்எல்ஏ கலந்து கொள்ளும் இடத்தில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை வரலாறு செய்திக்காக

-ஆரோக்கியராஜ் எல் குமார்.

Comments