நீடாமங்கலம் ஆட்டோ, கார், வேன்... ஓட்டுநர்களின் பரிதாபநிலை... உதவிக்கரம் நீட்டுமா அரசு..!!

 

-MMH

   நீடாமங்கலத்தில் சுமார் 200 ஆட்டோக்களும் ஐம்பதுக்கும் மேற்பட்ட வாடகை கார், வேன் 100க்கும் மேற்பட்ட வாடகை சுமை வண்டிகளும் உள்ளன.இதன் ஓட்டுனர்கள் அனைவருமே தினசரி வருமானத்தை நம்பியே இருந்து வருகின்றனர். பொதுவாக நீடாமங்கலம் ரயில் நிலையத்திலிருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்பவர்கள், எந்த உயர் மருத்துவ வசதிக்கும் தஞ்சாவூர் அல்லது கும்பகோணம் செல்ல வேண்டியவர்கள், வேளாண் இடுபொருட்கள், கட்டுமான பொருட்கள் இவைகளை அருகிலுள்ள கிராம பகுதிகளுக்கு கொண்டு செல்பவர்கள்.

இப்படி பல்வேறு அலுவல்களுக்கு இந்த வாகனங்களைப் பயன்படுத்தி வ பொதுமக்களும், அவர்களுக்கு சேவை அளிப்பதன் மூலம் வருமானம் ஈட்டும் ஓட்டுனர்களும் தற்போதைய பெருந்தொற்று ஊரடங்கினால்  வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு குடும்பம் நடத்தவே சிரமப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

தமிழக அரசு தங்களின் நிலையை கருத்தில்கொண்டு நிவாரண உதவிகளை நேரடியாகவோ, ஓட்டுநர் நல வாரியத்தின் மூலமாகவோ விரைவாக உதவ வேண்டும் என அங்கு வசிக்கும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

நாளைய வரலாறு செய்திகளுக்காக 

-திருமலைக்குமார் ரைட்ராஃபிக். ஈசா.

Comments

மோகன்ராஜ் said…
உங்கள் பணி
சிறக்கட்டும்