சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளரின் மனிதநேயம்! முழு அடைப்பில் நாடோடி மக்களுக்கு உதவி!
முழு ஊரடங்கால் அனைத்து மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிப்படைந்துள்ள நிலையில், நாடோடி மக்களின் நிலையைப் பற்றி கேட்கவே வேண்டாம்.சிங்கம்புணரி சேவுகமூர்த்தி கோவில் வளாகத்தில், நாடோடிகளான 15 குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் உள்பட 50 பேர் தஞ்சமடைந்துள்ளனர்.
சிங்கம்புணரி போக்குவரத்து காவல் ஆய்வாளர் மனோகரன் இன்று காலை ரோந்துப் பணியில் இருந்தபோது அவர்கள் அனைவரும் போதிய உணவின்றித் தவித்து வந்தது அவர் பார்வையில் பட்டது.
உடனடியாகச் செயல்பட்ட போக்குவரத்து காவல் ஆய்வாளர்:
50 பேருக்கும் மதிய உணவும், ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா 5 கிலோ அரிசி மற்றும் காய்கறிகளையும் சொந்தச் செலவில் ஏற்பாடு செய்து நாடோடி மக்களுக்கு வழங்கினார்.போக்குவரத்து காவலர்கள் ஜெகன்நாத், அஜ்மீர் களஞ்சியம் மற்றும் பில்லப்பன் ஆகியோர் உடன் இருந்தது குறிப்பிடதக்கது.- அப்துல்சலாம், ராயல் ஹமீது.
Comments