மதுரவாயல் தொகுதி வாழ் பொதுமக்களுக்கு, அரசு சார்பாக முக்கிய அறிவிப்பு !!

-MMH

     கொரானா பாசிடிவ் (Positive) நொயாளிகளுக்கு தமிழக அரசின் சுகாதாரத் துறை அமைச்சகத்துடன் இணைந்து அரசு சித்த மருத்துவ துறை, போரூர், ஆற்காடு சாலை வெங்கடேஸ்வரா மஹாலில் அரசு சித்தா மருத்துவ கொரானா தடுப்பு சிசிக்சை மையம்" அமைக்கப்பட்டு, 22.05.2021 முதல் மக்கள் பயன்பாட்டில் இருந்து வருகிறது. இங்கு வரும் கொரானா நோயாளிகள் 5 முதல் 7 நாட்களில் முழுமையாக குணமடைந்து வீட்டிற்கு செல்கிறார்கள். சித்தா மருத்துவ முறை சிகிச்சை மிகவும் பாதுகாப்பானது, பக்க விளைவுகள் அற்றது, நோயை முழுமையாக குணமாக்க கூடியது என நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் கொரானா நோயாளிகளுக்கான சித்த மருந்துகளான கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு குடிநீர் காலை 6 மணிக்கு வழங்கப்படும்.

அதைத் தொடர்ந்து வாய் கொப்பளித்தல், நடைபயிற்சி, 8 வடிவ நடைபயிற்சி, ஆவி பிடித்தல், யோகா மற்றும் மூச்சுப் பயிற்சி உள்ளிட்டவை அளிக்கப்படும். தொடர்ந்து, நோய் எதிர்ப்பாற்றல் தரும் ஆரோக்கியமான உணவுகள் மூன்று வேளையும் வழங்கப்படுகிறது. நோயாளிகளின் அறிகுறிகளுக்கேற்ப சித்த மருந்துகளான அமுக்கரா சூரணம், நெல்லிக்காய் லேகியம், காய்ச்சலுக்கு பிரம்மானந்த பைரவ மாத்திரை, சளி, இருமலுக்கு தாளிசாதி வடகம், ஆடாதோடை மணப்பாகு, தலைவலிக்கு நீர்க்கோவை மாத்திரை, பெயின் பாம், நுகர்வுத் தன்மைக்கு ஓமப்பொட்டணம் , உடல் வலிக்கு விஷ்ணு சக்கர மாத்திரை போன்ற மருந்துகள் கொடுக்கப்படுகின்றன.

தனி நபர் ஆவி பிடித்தல், மூலிகை பானம் உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது.மேலும் இவ்வளாகத்தில் மன கவலையைப் போக்க பாரம்பரிய விளையாட்டுகளை நினைவு படுத்தும் வகையில் விளையாட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு கொரோனா பரிசோதனை முடிவு சான்று மற்றும் ஆவணங்களுடன் வருகை தரலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், கொரோனாவிற்கு சித்த மருத்துவ சிகிச்சை பெற மக்களிடம் அதிக வரவேற்புள்ளது.  தேவையற்ற அச்சம், மன அழுத்தத்தைப் தவிர்க்க வேண்டும் என்று அரசு சித்த மருத்துவத்துறை மற்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் சித்த மருத்துவம் மட்டுமின்றி உடற்பயிற்சியும் தேவையற்ற அச்சத்தையும் மன அழுத்தத்தையும் போக்க கவுன்சிலிங்க் அளிக்கப்படுகிறது.

இந்த மையத்திற்கு வந்து கிசிச்சை பெற்றுக்கொள்ளும் கொரானா நோயாளிகள், தங்கள் வீட்டில் உள்ளது போல் மிகவும் பாதுகாப்பாக உணர்கின்றனர். முழுமையாக குணமடைந்து வீடு திரும்புகின்றனர். எனவே, அனைத்து பொதுமக்களும் போரூர், ஆற்காடு சாலையில் அமைந்துள்ள அரசு - சித்த மருத்துவ கொரானா சிசிக்சை மையத்தை முழுமையாக பயன்படுத்தி பலனடய மதுரவாயல் சட்டமன்ற உறுப்பினர், அன்பிற்கினிய மக்கள் சேவகர் அண்ணன் திரு. காரம்பாக்கம் க. கணபதி MLA அவர்கள் உங்களை வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறார். மிக்க நன்றி!

-நிருபர் பாலாஜி தங்கமாரியப்பன் சென்னை போரூர்.

Comments