கோவை ஓட்டு எண்ணும் மையத்தில் தி.மு.க., - அ.தி.மு.க.,வினர் மோதல்..!!
பொள்ளாச்சி ஜெயராமன் ஆதரவாளர்களுக்கும், தி.மு.க.,வினருக்கும், நேற்று ஓட்டு எண்ணும் மையத்தில் மோதல் ஏற்பட்டது.
போலீசார் இரு தரப்பினரையும் பிரித்து அசம்பாவிதம் ஏற்படாமல் தவிர்த்தனர். பொள்ளாச்சி தொகுதியில் துணை சபாநாயகர் ஜெயராமன் வெற்றி பெற்றதை தொடர்ந்து, அவருக்கு வெற்றிச்சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை ஓட்டு எண்ணிக்கை மையத்தில், சான்றிதழ் வாங்கிக்கொண்டு வெளியே வந்த ஜெயராமனுடன், அவரது ஆதரவாளர்கள் கோஷமிட்டபடி வந்தனர். அப்போது அங்கு திரண்டிருந்த தி.மு.க.,வினர், எதிர் கோஷம் எழுப்பத் தொடங்கினர்.
இரு தரப்பினரும் மாறி மாறி கோஷம் எழுப்பியதால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இந்நிலையில், ஜெயராமன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அதைக்கண்ட தி.மு.க.,வினர், அவருக்கு அருகிலேயே சென்றபடி, அ.தி.மு.க.,வினரை, 'டயர்நக்கி' என்று விமர்சித்து கோஷம் எழுப்பினர்.நிலைமை மோசம் ஆகாமல் தவிர்க்க, போலீசார் இரு தரப்பினரையும் பிரித்து விட்டனர். போட்டி போட்டு கோஷம் போட்டதால் நேற்று மாலை, ஓட்டு எண்ணும் மையத்தில் பதட்டமான சூழல் நிலவியது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன், பொள்ளாச்சி.
Comments