வேட்பாளர்கள், முகவர்கள் வாகனங்கள் நிறுத்தும் இடம் எங்கே !!

    -MMH

திருவள்ளூர்:

        திருவள்ளூர் மாவட்டத்தில், 10 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், கடந்த, மாதம் 6ம் தேதி நடந்தது. பதிவான ஓட்டுகள் அனைத்தும், பெருமாள்பட்டு, ஸ்ரீராம் கல்லுாரி வளாகத்தில், நாளை எண்ணப்பட உள்ளது. ஆவடி, பூந்தமல்லி, பொன்னேரி மற்றும் கும்மிடிப்பூண்டியில் பதிவான ஓட்டுகள், ஸ்ரீராம் மெட்ரிக் பள்ளி வளாகத்திலும்; திருவள்ளூர், திருத்தணியில் பதிவான ஓட்டுகள், கலை அறிவியல் கல்லுாரி வளாகத்திலும்; அம்பத்துார், மதுரவாயல், மாதவரம் மற்றும் திருவொற்றியூர் ஆகிய தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்திலும் எண்ணப்பட உள்ளன.

ஓட்டு எண்ணும் இடத்தில், வேட்பாளர், முகவர்கள் கடைப்பிடிக்க வேண்டிய வரைமுறை குறித்து, மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் பொன்னையா விடுத்துள்ள செய்திக்குறிப்பு: 

அனைத்து வேட்பாளர் மற்றும் முகவர்கள், அடையாள அட்டை மற்றும் வாகன அனுமதி சீட்டு ஆகியவற்றுடன் வர வேண்டும். அவர்கள் வரும் வாகனங்களை, தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள கீழ்கண்ட வாகன நிறுத்துமிடங்களில் வாகனம் நிறுத்த அனுமதிக்கப்படுவர். ஓட்டு எண்ணும் மையத்திற்கு வரும் அனைத்து வேட்பாளர் மற்றும் முகவர்கள், கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். தொற்று இல்லை என்பதை உறுதி செய்த சான்றிதழுடன், ஆய்வக அறிக்கையுடன் முக கவசம் அணிந்து, சமூக இடைவெளியை பின்பற்றி, மாவட்ட நிர்வாகம் எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. வ.எண் வழித்தடம் சட்டசபை தொகுதி1. வேப்பம்பட்டு - பெருமாள்பட்டு, ரயில்வே கேட் பாதை வழியாக மாதவரம், திருவொற்றியூர், கும்மிடிப்பூண்டி, பொன்னேரி, அம்பத்துார்2. பூந்தமல்லி நெடுஞ்சாலை - புதுச்சத்திரம் இன்டோ ஜப்பான் நிறுவனம் எதிரில் திருத்தணி, திருவள்ளூர், பூந்தமல்லி, ஆவடி, மதுரவாயல். எண்- வாகனம் நிறுத்துமிடம் தொகுதி1 பிரதான வாயில் அருகாமையில் உள்ள காலியிடம் மாதவரம், திருவொற்றியூர், அம்பத்துார், மதுரவாயல் ஸ்ரீராம் கல்லுாரி வளாக விளையாட்டு மைதானம் திருத்தணி, திருவள்ளுர், பூந்தமல்லி, ஆவடி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி மீதமுள்ள முகவர்கள், பள்ளி, கல்லுாரி வளாகத்தின் வெளியில், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள காலியிடங்களில், தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

-பாலாஜி தங்கமாரியப்பன், சென்னை போரூர்.

Comments