இன்று திருப்பூரில் வணிகர் சங்கம் கூட்டம் நடைபெற்றது!!

   -MMH

திருப்பூர் அவினாசிபாளையத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் தமிழ் நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வியாபாரிகளிடம் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு திருப்பூர் மாவட்ட தலைவர் கோவிந் தசாமி தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் பாதிப்பு காரணமாக தற்போது பிழைப்பு நடத்துவதே மிகவும் சிரமமான சூழ்நிலையாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அரசு அதிகாரிகள் கொரோனாவை பயன்படுத்தி முககவசம், சமூக இடை வெளி ஆகியவற்றை கூறி அத்துமீறி வசூல் வேட்டையில் ஈடுபடுகிறார்கள் . ரூ .2 ஆயிரம் முதல் ரூ .10 ஆயிரம் வரை அதிகாரிகளின் வசூல் வேட்டை தொடர்கிறது. இதனை அரசு தடுத்து நிறுத்தாவிட்டால் விரைவில் மாநிலத் தலைவர் விக்கிரமராஜா தலைமையில் மாபெரும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்தனர்.

-குமார், ஊத்துக்குளி.

Comments