கோவையில் கள்ளச்சந்தையில் மது விற்பனை ஜோர்..!!

     -MMH
     கோவை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கள்ளச்சந்தையில் மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதுவரை இல்லாத வகையில் கோவையிலும் தொற்று பாதிப்போர் எண்ணிக்கை புதிய உச்சத்துடன் அதிகரித்து வருகிறது.

இந்த சூழலில், தமிழகம் முழுவதும் வரும் 24 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த முழு ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கோவை மாநகர் உட்பட பல்வேறு பகுதிகளில் கள்ளத்தனமாக மது விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது. 

டாஸ்மாக் கடைகளின் அருகே உள்ள மதுபான கூடங்களில் கள்ளத்தனமாக மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருகின்றனர். ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில் ஒன்று ரூ.300 முதல் ரூ.500 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோவை வேலாண்டிபாளையம் அருகே செயல்பட்டு வரும் டாஸ்மாக் பாரில் கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் மதுவை வாங்க பலரும் போட்டி போட்டுக்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக,

- அனஸ், V. ஹரிகிருஷ்ணன்.

Comments