தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு வராததால் நோயாளிகளின் பாதுகாப்பு உடை அப்புறப்படுத்தாமல் வைத்துள்ளனர்!!

  -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கடந்த ஒரு வாரமாகவும் இன்று வரை தூய்மைப் பணியாளர்கள் வேலைக்கு வராத காரணத்தால் நோய்த்தொற்று பாதித்த நபர்கள் பயன்படுத்திய கொரோனா பாதுகாப்பு உடை அப்புறப்படுத்தாமல் மருத்துவமனையில் கவரில் வைத்துள்ளனர். 

மேலும் நோயாளிகள் படுத்து இருந்த படுக்கை மாற்றாமல் அப்படியே உள்ளன. இதனால் பிற நோயாளிகள் வரும் பட்சத்தில் அவர்களுக்கு தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். இதுகுறித்து மருத்துவமனை நிர்வாகம் உரிய நடவடிக்கை உடனடியாக எடுக்க வேண்டும். தவறும் பட்சத்தில் மருத்துவமனை நிர்வாகத்தை கண்டித்து அறப்போராட்டம் நடத்த தயாராக இருப்பதாக வால்பாறை மக்கள் தெரிவிக்கின்றனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-செந்தில்குமார், மூடீஸ்.

Comments