திருப்பூர் ஏற்றுமதி பின்னலாடை நிறுவனங்கள் மற்றும் சார்பு நிறுவனங்கள் நாளை முதல் 10% ஊழியர்களுடன் முக்கிய பணிகளை செய்யலாம்!

-MMH

      திருப்பூரில் ஏற்றுமதி பின்னலாடை உற்பத்தி ; நிட்டிங் , டையிங் , பிரின்டிங் போன்ற ஜாப்ஒர்க் நிறுவனங்கள் ; மூலப்பொருள் விற்பனை நிறுவனங்கள் , நாளை ( 7 ம் தேதி ) முதல் மீண்டும் இயங்கவுள்ளன.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் ( ஏ.இ.பி.சி. , ) தலைவர் சக்திவேல் கூறுகையில் , " 18 வயதுக்கு மேற்பட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்துவதற்கான பணிகளை ஏ.இ.பி.சி. , முன்னெடுத்துச்செல்கிறது . மத்திய , மாநில அரசுகள் , திருப்பூருக்கு கூடுதல் தடுப்பூசி ஒதுக்கவேண்டும் , உற்பத்தியில் ஏற்படும் காலதாமதங்களை,

ஏற்றுக்கொள்ளவேண்டும் ; ஆர்டர்களை ரத்து செய்யக்கூடாது ' என , வர்த்தகர்களுக்கு ஏற்கனவே , வேண்டுகோள் விடுத்துள்ளோம் ,  என்றார் . திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜாசண்முகம் கூறுகையில் ,  ஏற்றுமதி நிறுவனங்கள் இயங்குவதால் , வெளிநாட்டு வர்த்தகர்கள் மத்தியில் திருப்பூர் மீது நம்பிக்கை அதிகரிக்கச் செய்துவிடும் . சாம்பிள் ஆடைகளை தயாரித்து அனுப்பி , புதிய ஆர்டர்கள் கைநழுவுவதை தவிர்க்க முடியும் . தொழிலாளர்களும் வேலைவாய்ப்பு பெறுவர் .

 அரசு கூறியுள்ள வழிகாட்டுதலின் படி தொற்று தடுப்பு அம்சங்களை பின்பற்றி தொழிலாளர்களுக்கு  பாதுகாப்பான முறையில் தொழில்  நிறுவனங்கள் செயல்பட வேண்டும் எனவும் மேலும் மத்திய , மாநில அரசுகள் , ஆடை உற்பத்தி தொழிலாளர் அனைவருக்கும் , விரைவில் தடுப்பூசி செலுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

 நாளைய வரலாறு செய்திக்காக

 -குமார்.

Comments