ஊரடங்கின் பிடியில் 11 மாவட்டங்கள் !!

 

-MMH

    தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக முழு ஊரடங்கு அமலில் இருந்த போதிலும் சில மாவட்டங்களில் மட்டும் பெரும் தொற்றின் பாதிப்பு குறைந்துள்ளது. அதில் குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, தஞ்சை, நாகை மயிலாடுதுறை திருவாரூர் உட்பட 11 மாவட்டங்களில் கொடிய நோயானது  கட்டுக்கடங்காமல் உள்ளது. அதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு அந்த பதினோரு மாவட்டங்களுக்கும் ஊரடங்கை  தொடர்ந்து நீடித்து சில கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. மீதம் உள்ள மாவட்டங்களுக்கு வேறு சில கட்டுப்பாடுகளுடன் கூடிய தளர்வுகளை அறிவித்துள்ளது .

தமிழகத்தில் 11 மாவட்டங்களுக்கு கட்டுப் பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு இன்னும் ஏழு நாட்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது அதன் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.

எனவே இந்த மாவட்டங்களில் நோய்த்தொற்று பரவலை கட்டுக்குள் கொண்டுவரும் வகையிலும், அதே சமயம் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கத்துடனும் தற்போது  அனுமதிக்கப்பட்டுள்ள தளர்வுகளின்  விவரம் வருமாறு:-

தனியாக செயல்படுகின்ற மளிகை, பலசரக்குகள், காய்கறிகள், இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்யும் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

காய்கறி, பழம் மற்றும் பூ விற்பனை செய்யும் நடைபாதை கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை செயல்பட அனுமதிக்கப்படும்.

மீன் சந்தைகள் மொத்த விற்பனைக்காக மட்டும் செயல்பட அனுமதிக்கப்படும். மீன் சந்தைகளில் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் பொருட்டு, ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் திறந்த வெளியில் இந்த சந்தைகளை அமைப்பதற்கான மாற்று ஏற்பாடுகளை மாவட்ட நிர்வாகங்கள் உடனடியாக செய்ய வேண்டும்.

இறைச்சிக்கூடங்கள் மொத்த விற்பனைக்கு மட்டும் அனுமதிக்கப்படும்.

அனைத்து அரசு அலுவலகங்களும், 30 சதவீத பணியாளர்களுடன் செயல்பட அனுமதிக்கப்படும்.

சார்பதிவாளர் அலுவலகங்கள் ஒரு நாளைக்கு 50 சதவீத டோக்கன்கள் மட்டும் வழங்கப்பட்டு, பத்திரப்பதிவுகள் மேற்கொள்ள அனுமதிக்கப்படும்.

தீப்பெட்டி தொழிற்சாலைகள் 50 சதவீத பணியாளர்களுடன் நிலையான வழிகாட்டு நடைமுறைகளை பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படும் என்று அதில்? தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்தியாக 

-V.ராஜசேகரன் தஞ்சாவூர்.

Comments