நாடு முழுவதும் கொரோனாவால் 1,742 குழந்தைகள் பெற்றோரை இழந்து ஆதரவற்றவர் ஆகினர்.....

 

-MMH

                  நாடு முழுவதும் பெற்றோர்கள் கொரோனாவால் இறந்ததால், 1742 சிறுவர்கள் ஆதரவற்றர்களாகி  இருப்பதாக உச்ச நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறார் விடுதிகளில் கொரோனா பரவுவது தொடர்பான  விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரிக்க வேண்டும் என்பது குறித்த வழக்கை உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது, மகாராஷ்டிரா அரசு  தாக்கல் செய்த அறிக்கையில், ‘மே 30ம் தேதி வரை  4,451 சிறுவர்கள் பெற்றோரில் ஒருவரை கொரோனாவால் இழந்துள்ளனர்.

141 குழந்தைகள் 2 பெற்றோரையும் இழந்துள்ளனர்,’ என குறிப்பிட்டு இருந்தது. இதை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், நாடு முழுவதும் இதுபோல் எத்தனை குழந்தைகள் கொரோனாவால் பெற்றோரை இழந்துள்ளனர் என்ற புள்ளி விவரத்தை தாக்கல் செய்யும்படி உத்தரவிட்டது. அதன்படி, தேசிய சிறுவர்கள் உரிமை பாதுகாப்பு தேசிய ஆணையம் நேற்று தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தில் ‘நாடு முழுவதும் 9,346 குழந்தைகள் ஆதரவற்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர், ஒரு பெற்றோர் அல்லது 2 பெற்றோரையும் இழந்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தில் 2,110, பீகார் 1,327, கேரளா 952 மற்றும் மத்தியப் பிரதேசத்தில் 712 சிறார்கள் இதுபோன்று நிலையில் இருக்கின்றனர்,’ என கூறப்பட்டுள்ளது. மேலும், கொரோனாவால் பாதிக்கப்பட்ட  குழந்தைகள்  குறித்த புள்ளி விவரங்களை ஜூன் 7ம் தேதி வரை தொடர்ந்து பால் ஸ்வராஜ் இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

-வேல்முருகன் சென்னை.

Comments