திருப்பூர் மாநகராட்சியில் தடை செய்யப்பட்ட பகுதியை சேர்ந்தவர்கள் வெளியில் சுற்றினால் ரூ.2000 அபராதம் வசூல்!

 

-MMH

      இன்று 02/06/21  தமிழக அரசின் வழிகாட்டுதல்களை மீறி தடைசெய்யப் பட்ட பகுதியாக உள்ள கணியாம்பூண்டி ஊராட்சி பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சுற்றிய இருவருக்கு ரூபாய் 2000 அபராதம் வசூல் செய்யப்பட்டது.  விதியை மீறி கதவை அடைத்து  உள்ளே தொழிலாளர்களை வைத்து வேலை செய்த இரண்டு பனியன்  நிறுவனங்களுக்கு மாநகராட்சி அதிகாரிகளால் சீல்  வைக்கப்பட்டுள்ளது . ஆகவே , தொழில்துறையினரும் பொதுமக்களும் தமிழக அரசு அறிவித்துள்ள ஊரடங்கு விதிகளை முழுமையாக கடைபிடித்து தேவையில்லாத பிரச்சினைகளை தவிர்க்குமாறு   கணியாம்பூண்டி ஊராட்சி நிர்வாகத்தினர் அறிவுறுத்தியுள்ளனர்.

மேலும் கணியாம்பூண்டி  ஊராட்சியில் வசிக்கும் அனைத்து வீடுகளிலும் உள்ள பொதுமக்களின் உடல்நிலையை கண்காணிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழு உறுப்பினர்கள் தங்கள் வீடு தேடி வந்து வீட்டில் உள்ளவர்களின் உடல்நிலை பற்றி தகவல் சேகரிப்பார்கள். அவ்வாறு வரும் குழு உறுப்பினர்களிடம் உண்மையான தகவல்களை தருமாறு  பொதுமக்களிடம் கணியாம்பூண்டி ஊராட்சி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-குமார் நிருபர் ஊத்துக்குளி.

Comments