சுதந்திரப் போராட்ட வீரர் வ.வே.சுப்பிரமணியம் !! ஜெயித்துக் காட்டியவர்கள் - தொடர் 2

 

-MMH

        சுதந்திர போராட்ட வீரரும், தமிழ் நவீன சிறுகதையின் தந்தை எனவும் போற்றப்பட்ட  வரகனேரி வேங்கடேச சுப்பிரமணியம்  1881ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ம் தேதி திருச்சி மாவட்டம் வரகனேரியில் பிறந்தார். வ .வே .சுப்பிரமணியம்  இந்திய விடுதலைக்காக முதன்மை பங்காற்றியவர் .  கிரேக்கம், இலத்தீன், பிரெஞ்சு, ஆங்கிலம், சமஸ்கிருத, தமிழ் மொழிகளில் ஆழ்ந்த புலமை பெற்றவராய் விளங்கிய வ வே சு அவர்கள்  சிறந்த இலக்கிய வாதியும், மொழி பெயர்ப்பாளரும் ஆவார். 

தமிழ் இலக்கிய பங்களிப்புகளுக்காக இவர் தமிழ் சிறுகதை தந்தை என்றும் அழைக்கப்படுகிறார்.மகாகவி சுப்ரமணியபாரதி எனும் மாபெரும் கவிஞரின் பெருமையை அக்காலத்திலேயே அறிந்து அவர் கவிதைகளை முக்கிய ஆக்கங்களாகக் கருதிச் சில திறனாய்வுக் குறிப்புகளை அவரது சமகாலத்திலேயே பதிவு செய்தவர் .

திருக்குறளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். குளத்தங்கரை அரசமரம் என்கின்ற! பெயரில் சிறுகதையை வெளியிட்டார். இதுவே முதன்முதலில் வெளிவந்த தமிழ் சிறுகதை. இவரது மங்கையர்க்கரசியின் காதல் என்ற புத்தகம் தமிழில் வெளிவந்த முதலாவது சிறுகதைத் தொகுதி.

1921 - ல் தேசபக்தர் என்னும் தமிழ் தினசரியில் ஆசிரியராக இருந்தபோது மற்றொருவர் எழுதிய தலையங்கத்திற்காக ராஜ துரோக குற்றம் சாட்டப்பட்டு ஒன்பது மாதங்கள் சிறைவாசம் புரிந்த சுப்பிரமணியம் அவர்கள் 1923 - ல் சேரன்மாதேவியில் கருகுலக்கல்வி துவங்கியவர் .  

1925 ஜூன் 3 தம் குருகுல மாணவர்களுடன்  ,  தம் பிள்ளைகளோடு அம்பாசமுத்திரம் அருவி காண சுற்றுலா சென்றபோது தனது மகள் தவறி தண்ணீரில் வீழ்ந்து விட மகளை  காப்பாற்ற சென்ற தந்தை சூழலில் சிக்கி மரணமடைந்தார் 

-ஜெயித்துக் காட்டியவர்கள் சரித்திரம் தொடரும்...

-ஊடகவியலாளன் ஆர்.கே.பூபதி.

Comments