உங்கள் வீட்டு விலங்குகள் நலமா??

-MMH 

    சிங்கம் போல வாழ்ந்த மனிதர்களை தாண்டி "சிங்கத்தையே" பலியாக்கிய கொரோனா!! சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா , ஆசியாவிலேயே முகப்பெரும் பரப்பளவில் மறைந்த எம்ஜிஆர் அவர்களால் துவக்கபட்ட விலங்கு காட்சியகமாகும். இங்கு பலவேறு வகையிலான ஊர்வன , பரப்பன, நீர்வன உயிர்கள்,  பொதுமக்களின் காட்சிக்காக வைக்கப்படுள்ளது , மேலும் 7 பெண் சிங்கங்கள் உட்பட்ட 13  சிங்கங்களும் அதன் வாழ்வியல் சூழலுகேற்ப வடிவமைக்கபட்ட தனியிடத்தில் காட்சிபடுத்தபடுகின்றது .

இந்நிலையில் தற்போது கொரோனா பரவலின் காரணமாக உயிரியல் பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறக்கபடாத சூழலில் அங்கே இருக்கும் சிங்கம் ஒன்று  கடந்த வியாழன் மாலை கொரோனா தொற்றின் காரணமாக இறந்தது. மனிதர்களுக்கு மட்டுமே கொரோனா பரவல் நிகழும் என்ற மருத்துவர்களின் எண்ணத்தினை இச்சிங்கத்தின் மரணம் நகரமக்களை பீதியடையவைத்திருக்கின்றது.

தற்போது மேலும் இன்னொரு அதிர்ச்சி செய்தியாக 9 சிங்கங்கள் கொரோனா தற்கால பாதிக்கபட்டுள்ளதாக  "போபாலில்" செயல்படும் தேசிய விலங்குகள் நோய்தொற்று ஆராச்சியகம் தெரிவித்துள்ளது.

மனிதர்களுடன் எவ்வித நெருக்கமும் கொண்டிராத சிங்கங்களுக்கே இத்தகைய வைரஸ் பாதிப்பினை ஏற்படுத்தியிருக்கும் பொழுது , மனிதர்களின் வீட்டுவிலங்குகளான பூணை , நாய், ஆடு , மாடுகளுக்கு இத்தொற்று எந்த வித பாதிப்பை ஏற்படுத்தும் என்பது புரியாத புதிராக உள்ளது. 

-நவாஸ் சென்னை.

Comments