கொரோனா சிகிச்சையளிக்க கோவை முத்தூஸ் மருத்துவமனைக்கு தடை..!! முறைகேடு புகாரா.?

 

-MMH 

     கோவை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோய் பரவலை பயன்படுத்தி தனியார் மருத்துவமனைகள் அதிக கட்டணம் வசூலிப்பதாக புகார்கள் எழுந்தன. இதில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவரின் உடலை திருப்பித்தர ரூ.11.5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்துமாறு சரவணம்பட்டி பகுதியில் இயங்கிவரும் முத்தூஸ் மருத்துவமனை கூறுவதாக நபர் ஒருவர் நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் விசாரணை நடைபெற்றது.

இந்த நிலையில் முத்தூஸ் மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தடைவிதித்து விதித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மேலும் தற்போது சிகிச்சையில் உள்ள கொரோனா நோயாளிகளுக்கு உரிய முறையில் சிகிச்சை அளித்து டிஸ்சார்ஜ் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆட்சியர் கூறுகையில், நான்கு மருத்துவமனைகள் மீது புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதில் ஒரு மருத்துவமனைக்கு புதிய கொரோனா நோயாளிகளை அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள நோயாளிகள் டிஸ்சார்ஜ் ஆகும் வரை அங்கேயே இருக்கலாம்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

-I. அனஸ். V. ஹரிகிருஷ்ணன்.



Comments