கோவையில் பொதுமக்களுக்கு கசாயத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்திய பாபுஜி சுவாமிகள்.!!

 

-MMH 

        கோவை மலுமிச்சாம்பட்டியை சேர்ந்தவர் பிரபல பாபுஜி சுவாமிகள் இவர் சித்த மருத்துவம் மூலம் பல்வேறு நோய்களை குணப்படுத்தியவர். கடந்த இரண்டு ஆண்டுக்கு முன் டெங்கு காய்ச்சலால் சிகிச்சை பலனின்றி உயிர்கள் பலியாகினர். இதற்கு முற்றுபுள்ளி வைக்கும் வகையில் நிலவேம்பு கசாயத்தை கண்டுபிடித்து தமிழகம் முழுவதும் இலவசமாக வழங்கி வந்தார். இதனால் இந்நோய் முற்றிலும் ஒளிக்கப்பட்டது.

இம்முறை உலக முழுவதும் கொரோனா நோய்க்கு பலரும் உயிரிழந்து வருகின்றனர்.கொரோனா நோயிலிருந்து காப்பாற்றுவதற்கு F2K என்ற கசாயத்தை கண்டுபிடித்து மத்திய மாநில சித்தா ஆயிர்வேத மருத்துவத்தில் ஒப்புதல் பெற்றுள்ளார்.தற்போது தமிழகத்தில் கொரொனாவினால் பாதிப்புக்கு உள்ளாகி வரும் நோயாளிகளுக்கும்,பொதுமக்களுக்கும் இலவசமாக இக்கசாயத்தை வழங்கி வருகிறார்.

தொடர்ந்து கோவை பட்டணம் புதூர் அரசு பள்ளியில் கொரோனா சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை தான் தத்தெடுத்துள்ளதாகவும் இங்கு சிகிச்சை பெரும் நோயாளிகளுக்கு F2K கசாயத்தை பாபுஜி சுவாமிகள் நேரடியாக சென்று வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.தொடர்ந்து  அங்கு மோசமான நிலையில் சிகிச்சை பெற்று வந்த ஆரம்ப சுகாதார செவிலியர் ஒருவர் தான் இந்த F2K கசாயத்தை குடித்து வந்ததால் மோசமான நிலையில் இருந்து மீண்டு வந்ததாக தெரிவித்தார். 

மேலும் F2K கசாயத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்களுக்கு இலவசமாக வழங்கி வருவதாகவும், தனிமைப்படுத்தப்பட்ட நோயாளிகள் கசாயம் வேண்டுமென்று தன்னை தொடர்பு கொண்டால் நேரடியாக விநியோகம் செய்வதாக தெரிவித்துள்ளார்.இதன் மூலம் கொரோனா நோயாளிகள் முழுமையாக குணமடைந்து பயன் பெற்றுள்ளதாகவும் பாபுஜி சுவாமிகள் தெரிவித்தார்.

- சீனி,போத்தனூர்.

Comments