இருண்ட சாலையில் பயணிக்க அச்சம்.! மின்விளக்கு அமைத்துத்தர மக்கள் கோரிக்கை..!!
கோவை மாவட்டம் 74வது வார்டு உக்கடம் கூட்ஸ் சாலையில் பயணிக்கும் ஏராளமானோர் அச்சப்படும் நிலை உள்ளது. இந்தப் பகுதி முழுவதும் அதிகமான பொதுமக்கள் வசித்து வரும் நிலையில் இரவு நேரங்களில் பெண்கள் நடமாட முடியாத நிலையில்.
சாலை முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதும் தனியே வரும் பெண்களிடம் தங்களுடைய தங்க நகைகளை பறித்துச் செல்லும் நிலையும், சட்டவிரோதமாக போதைப் பொருள்கள் அந்த இருள் பகுதியில் விற்பனை நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
உடனடியாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதை கவனத்தில் கொண்டு இருளில் மூழ்கிய சாலையை மின் விளக்கு அமைத்து மக்களின் அச்சத்தைப் போக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஈசா.அனஸ்.
Comments