கிணத்துக்கடவு பகுதியில் சோதனை சாவடி அமைத்த கிராம மக்கள்...!!
கோவை கிணத்துக்கடவு பகுதியில் கொரோனா பரவலை தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் கிணத்துக்கடவு அருகே உள்ள தேவராயபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட சென்றாம்பாளையத்தில் சிலருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியானதை அடுத்து வெளி நபர்கள் அப்பகுதிக்கு வருவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இதற்காக இந்த கிராமத்துக்கு வரும் அனைத்து பகுதிகளும் அடைக்கப் பட்டன. மேலும் பகுதியில் சோதனை சாவடியை கிராம மக்களே அமைத்து அப்பகுதியை கண்காணித்து வருகின்றனர் மேலும் அவசிய தேவைக்காக மட்டுமே உள்ளூரை சேர்ந்த பொதுமக்கள் வெளியே செல்ல அனுமதிக்கப்படுகின்றனர்.
வெளியே இருந்து வரும் தேவை இல்லாமல் யாரையும் எங்கள் கிராமத்துக்குள் நுழைய அனுமதிப்பது இல்லை. மேலும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகிறோம் என்று அக்கிராம மக்கள் கூறுகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.
Comments