சாத்தான்குளத்தில் மாற்றுத்திறனாளியின் நம்பிக்கை உதவுமா அரசு..!!

 

-MMH

         தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே போலையர்புரத்தைச் சேர்ந்தவர் சந்தன சிலுவை(வயது 68). ஒலிப்பெருக்கி உரிமையாளரான இவர் பனை ஏறும் தொழிலாளியாக உள்ளார். இவருக்கு 15 ஆண்டுகளுக்கு முன்பு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், அறுவை சிகிச்சையின்  மூலம் இடது கால் அகற்றப்பட்டது.. எனினும் தன்னம்பிக்கை இழக்காத சந்தன சிலுவை ஒற்றைக் காலிலேயே பல ஆண்டுகளாக பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்கி வருகிறார். 

பனை மரங்களில் ஏணியை கயிற்றால் கட்டி வைத்து,  அதன் வழியாக சந்தன சிலுவை லாவகமாக ஏற்பட்டது  பதனீர் இறக்குகிறார். காலையிலும், மாலையிலும் ஏராளமான பனை மரங்களில் ஏறி பதனீர் இறக்குகிறார். ஒரு காலை இழந்தாலும் தன்னம்பிக்கையை இழக்காமல் பனைமரம் ஏறும் தொழிலாளியை பொதுமக்கள் வியந்து பார்ப்பதுடன் இதுபோன்ற ஒரு காலை இழந்து தவிக்கும் மாற்றுத்திறனாளிக்கு அரசு போதிய ஊக்கத்தொகை வழங்கி வாழ்வாதாரத்தை அழிக்க வேண்டுமென்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாளைய வரலாறு செய்திகளுக்காக தூத்துக்குடி 

-வேல்முருகன். ஈசா.

Comments