தமுமுக வினர் பதாகை ஏந்தி மத்திய அரசுக்கு கண்டனம்!!!

-MMH

13 மாநிலங்களில் சிஏஏ சட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ள  மோடி தலைமையிலான ஒன்றிய அரசை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் இன்று 02.05.2021  காலை 10.30 மணி முதல் 10.45 மணி வரை வீடுகளுக்கு  முன்பு கண்டன பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இதில்  கோவை வடக்கு மாவட்ட தமுமுக சார்பாக மத்திய பகுதி தலைவர் இப்ராஹீம்தலைமையில் செல்வபுரம் தெற்கு கிளை தமுமுக செயலாளர், மமக செயலாளர், பொருளாளர் மற்றும் கிளை நிர்வாகிகள் மகளிர் அணியினர் பலரும்கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது சமூக இடைவெளி பின்பற்றி, முக கவசம் அணிந்து போராட்டம் நடைபெற்றது.

நாளைய வரலாறு செய்திக்காக 

-ஹனீப் கோவை.

Comments