படகு இல்லம் அடுத்த ரேவியூ பகுதியில் உள்ள புறம்போக்கு நிலம் யாருக்கு சொந்தம்!! - வால்பாறையில் பரபரப்பு!!

   -MMH

    கோவை மாவட்டம் வால்பாறை படகு இல்லம் அடுத்த ரேவியூ என்ற பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தில் வீடு இல்லா  பொதுமக்கள் வீடு கட்டுவதற்கு நிலத்தை ஆக்கிரமித்தனர். 

இந்நிலையில் அந்த பகுதிக்கு உட்பட்ட ஸ்டேன் மோர் எஸ்டேட் நிர்வாகி ஒருவர் இந்தப் பகுதி எங்களுடைய இடம் என்று கூறி பொதுமக்களை தடுத்தார்.

இது எங்களுடைய இடம் என அடித்துக் கூறும் நிர்வாகி, இல்லை இல்லை இது புறம்போக்கு நிலம் தான் என அடித்துக் கூறும் பொதுமக்கள். இதனால் பொதுமக்களுக்கும் எஸ்டேட் நிர்வாகிக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. 

நாளைய வரலாறு செய்திக்காக, 

-திவ்ய குமார்,வால்பாறை.

Comments