ஆனைமலை ஆலம் விழுது அமைப்பின் 102 ஆம் வார களப்பணி!!

 -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை ஆலம் விழுது அமைப்பின் சார்பாக 102 ஆம் வார மரம் நடும் விழா மற்றும் நடவுசெய்த மரங்களை பராமரித்தல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் இன்று அதிகாலை ஆனைமலை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இனிதே நடைபெற்றது.

ஆலம் விழுது அமைப்பு  ஆழமான சிந்தனையுடன்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக்கிழமை ஆலம் விழுது அமைப்பினர் ஒன்றுகூடி ஒற்றுமையுடன் மரக்கன்றுகள் நடவு செய்தல் மற்றும் நடவு செய்த மரக்கன்றுகளை பராமரித்தல் தவறாமல் செய்து வருகின்றனர். இவர்களை இப்பகுதி பொதுமக்கள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊர்கூடி மரம் வளர்ப்போம் !! உலகை பசுமை ஆக்குவோம்!! என்ற சிந்தனையோடு,

-M.சுரேஷ்குமார்.

Comments