சூலூரில் தேசிய உ ஷு பயிற்சி முகாம்.! 200 நடுவர்கள் பங்கேற்பு !!

 

-MMH

    கோவை சூலூரில்  தனியார் கல்லூரியில் முதல் முறையாக தேசிய  உஷு பயிற்சி முகாம் 200 நடுவர்கள் பங்கேற்க உள்ளனர். தமிழகத்தில் சீன தற்காப்பு கலைகளை ஊக்குவிக்கும் விதமாக உஷு பயிற்சி முகாம் சூலூரில் உள்ள தனியார் கல்லூரியில்  வருகின்ற இருபத்தி எட்டாம் தேதி தொடங்கி ஆறு நாட்கள் நடைபெற உள்ளது.

இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்கவுள்ளனர். மாநில அளவில் நடைபெறும் போட்டிகளில் இவர்கள் நடுவர்களாக பங்கேற்பதற்கு இந்த பயிற்சியானது வழங்கப்படுகிறது. சர்வதேச அளவில் கலையில் பயிற்சி பெற்றவர்கள் கலந்துகொண்டு இந்த பயிற்சியை வழங்க உள்ளனர். மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து பயிற்சியில் பங்கேற்க உள்ளனர். இது குறித்த செய்தியாளர் சந்திப்பு இன்று நடைபெற்றது

இதில் செய்தியாளர்களிடம் பேசிய பேசிய, இந்திய உஷு விளையாட்டு சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்:

சபீர் பேசும்போது, இந்தியாவில் உள்ள 24 மாநிலங்களில் இருந்து வரும் நபர்களுக்கு இந்த பயிற்சி வழங்கப்படுகிறது 200 பேர் இதில் பங்கேற்க உள்ளனர். சீன தற்காப்புக் கலைகளில் ஒன்றான உஷு இரண்டு கலை வடிவங்களைக் கொண்டது ஒன்று டயோலு மற்றொன்று சான்டா,இந்த இரண்டு வடிவங்களுக்கும் தனித்தனியாக பயிற்சி வழங்கப்படுகிறது.

இந்த பயிற்சி முடிந்தவுடன் அவர்களுக்கு எழுத்து முறை தேர்வும் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளது. ஆசிய விளையாட்டில் தொடர்ந்து இந்த விளையாட்டில் பதக்கம் பெற்ற வருகிறார்கள் எனவே தமிழகத்தில் இந்த கலையை வளர்ப்பதற்கு அரசு போதிய வசதிகளை செய்து கொடுத்தால் அதிக அளவு மாணவர்கள் இதில் கலந்து கொள்வார்கள் வேலைவாய்ப்பு அவர்களுக்கு உருவாகும் என தெரிவித்தார்.

இந்த சந்திப்பில் இந்திய உஷு விளையாட்டு சங்கத் தலைவர் பூபேந்திர சிங் பாஜ்வா, செயலாளர் ஜான், , நிர்வாக இயக்குனர்,ஷகில் அகமது  கோவை மாவட்ட உஷு விளையாட்டு சங்க தலைவர் ஜெயபாரதி இந்திய உஷு விளையாட்டு சங்க நிர்வாக உறுப்பினர் சபீர் கல்லூரி  கே.பி ஆர் கல்லூரி முதல்வர், அகிலா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

- சீனி,போத்தனூர்.

Comments