மேலூர் சுற்றுவட்டாரத்தில் கோவில் உள்பட 4 இடங்களில் கொள்ளை! பொதுமக்கள் அச்சம்!

-MMH

    மதுரை மாவட்டம் மேலூரில் கடந்த 21/08/2021 சனிக்கிழமையன்று இரவு, பேங்க் ரோட்டில் அடுத்தடுத்து இளம்புயல் மொபைல் கடை மற்றும் மீனாட்சி உணவகத்தின் பூட்டை உடைத்து பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. மேலும் அதே தெருவில் உள்ள சக்தி மாரியம்மன் கோவிலின் உண்டியலை உடைத்து பணம் திருடப்பட்டுள்ளது.

அதே நாளில்  கருங்காலக்குடியில் இருக்கும் ஹைதர் அலி(37) என்பவருக்குச் சொந்தமான யுனிக் மொபைல் கடையின் பூட்டை உடைத்து ரொக்கம் ₹.52000 மற்றும் ஒரு இலட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 புதிய ஆன்ட்ராய்ட் மொபைல்கள், செல்போன் உதிரிபாகங்களை மற்றும் வாசனைத் திரவியங்கள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள.

இப்படி ஒரே நாளில் நான்கு இடங்களில் நடந்துள்ள திருட்டு சம்பவங்கள் மேலூர் பகுதியில் வாழும் மக்களிடையே பெரும் அச்சத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கின்றது. இதுகுறித்துத் தகவலறிந்த மேலூர் துணை காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன், கொட்டாம்பட்டி காவல் ஆய்வாளர் பதமநாபன் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை நடத்தி வழக்குப்பதிந்து மர்ம நபர்களை தேடிவருகின்றனர்.

இவ்விடயத்தில் மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி காவல்துறையினர் துரிதமாகச் செயல்பட்டு, திருடர்களை பிடிக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. விரைந்து நடவடிக்கை எடுத்து திருடர்களை கண்டுபிடித்து, தங்கள் குடும்பங்களின் அடிப்படைத் தேவைக்காக கடைநடத்தும் அன்றாடங்காய்ச்சிகளின் பொருட்களை மீட்டு அவர்களிடம் ஒப்படைப்பதன் மூலம் மேலூர் பகுதி காவல்துறை தனது சரிந்த செல்வாக்கை மீட்டெடுக்கும் என  மக்களிடம் எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

-மதுரை வெண்புலி.

Comments