தம்பதிகளுக்கு மிக உயர்வான எரிபொருளை வழங்கிய உறவினர் ஆச்சரியத்தில் சக உறவினர்கள்..!!

   -MMH

     நெல்லை பாளையங்கோட்டையில் நடந்த திருமண நிகழ்வு ஒன்றியில் புதுமணத் தம்பதிக்கு நூதன முறையில் இரண்டு லிட்டர் பெட்ரோலை வழங்கி உறவினரின் செயல் பலரின் கவனத்தைப் பெற்றுள்ளது.

நெல்லையில் நடைபெற்ற திருமண விழாவிற்கு வந்த உறவினர் ஒருவர் பெட்ரோல் டீசல் விலை உயர்வைச் சுட்டிக்காட்டி பெட்ரோல் 2 லிட்டரைப் பரிசாக வழங்கி வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை பாளையங்கோட்டையை அடுத்த பொட்டல் பகுதியைச் சேர்ந்தவர் ராஜா. இவருக்கும் பவித்ரா என்ற பெண்ணுக்கும் பாளையங்கோட்டையில் உள்ள திருமண மண்டபத்தில் வைத்து திருமணம் நடைபெற்றது.

இந்த சூழலில் தற்போது பெட்ரோல் டீசல் விலை விண்ணைத் தொடும் அளவிற்கு உயர்ந்துள்ளதால் மணமக்களின் உறவினரான மாரியப்பன் என்பவர் நூதன முறையில் 2 லிட்டர் பெட்ரோலை மணமக்களுக்குப் பரிசாக வழங்கி வாழ்த்திச் சென்றுள்ளார்.

வித்தியாசமான, உயர்வான பொருட்கள் திருமண நிகழ்வுகளில் மணமக்களுக்கு வழங்கப்படும். இந்த வரிசையில் பெட்ரோல் விலை உயர்வின் காரணமாக அதுவும் அந்த பட்டியலில் இடம்பிடித்திருப்பது திருமணத்திற்கு வந்தவர்களின் பேசு பொருளாக மாறியது.

நாளைய வரலாறு செய்திக்காக,

-அன்சாரி,  நெல்லை.


Comments