சிங்கம்புணரி அருகே டிராக்டர் மோதி வாலிபர் பலி!

  -MMH

   சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே உள்ள வகுத்தெழுவன்பட்டியைச் சேர்ந்தவர் பாலுச்சாமி மகன் குமார் (வயது 32). 

இவர் நேற்று சிங்கம்புணரி வாரச்சந்தையில் இரவு 8 மணி அளவில் வீட்டுக்குத் தேவையான காய்கறிகளை வாங்கியிருக்கிறார்.  

அதன்பின்பு, தனது இருசக்கர வாகனத்தில் சிங்கம்புணரியிலிருந்து பருவப்பட்டி சாலையில் அவரது வீட்டிற்கு  சென்று கொன்டிருந்தபோது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதால் பலியானார்.

அடர்ந்த இருட்டில் நடைபெற்ற இந்த இந்த விபத்தில் குமாரின் மீது மோதிய வாகனத்தைக் கண்டுபிடிக்க சிங்கம்புணரி காவல்துறையினர் தீவிரம் காட்டினர். சம்பவம் நடந்த இடத்திற்கு விரைந்து வந்த காவல் ஆய்வாளர் சீராளன், உடனடியாக குமாரின் சடலத்தை மீட்டு சிங்கம்புணரி அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு  ஆய்வுக்காக அனுப்பி வைத்தார். அதன்பின்பு காவல்துறையினர் நடத்திய தீவிர விசாரணையில், விபத்தை ஏற்படுத்திய வாகனம் ஒரு டிராக்டர் என்றும், அதை ஓட்டியவர் சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த மாணிக்கம் மகன் விக்னேஷ் (27) என்பதும் தெரியவந்தது. அவர் கைது செய்யப்பட்டார்.

சாலை விபத்தில் பலியான குமாருக்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

- ராயல் ஹமீது & அப்துல்சலாம்.

Comments