மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுடன் மதுரை மாவட்ட த.மு.மு.கவினர் சந்திப்பு!!

   -MMH

மதுரை மேலூர் அருகே உள்ள கருங்காலக்குடியில் தேசிய நெடுஞ்சாலையில் கட்டப்பட்டு வரும் பாலத்தினை மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் அவர்கள் நேற்று (27/08/2021) நண்பகல் 12.00 மணியளவில் ஆய்வு செய்தார். அதுசமயம் உடனிருந்த தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளிடம் பணியின் தாமதத்தைப் பற்றி வருத்தம் தெரிவித்ததுடன், தரத்தில் எவ்வித சமரசத்திற்கும் இடமிருக்கக் கூடாது என அறிவுறுத்தினார்.

அதன்பின்பு, மதுரை மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாவட்டச் செயலாளர் பொறி.பக்ருதீன் அலி அகமத் அவர்களின் தலைமையில் மேலூர் தொகுதியின் தமுமுக நிர்வாகிகள் அவரைச் சந்தித்து, பாலம் வேலையுடன் சேர்த்து கருங்காலக்குடியில் ஒருங்கிணைந்த பேருந்து நிறுத்தம் அமைத்துத் தருவதற்கு தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு அழுத்தம் தரவேண்டி கடிதம் தந்தனர். 

இச்சந்திப்பின் பொழுது மார்க்சிய பொதுவுடமைக் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் பொன்னுத்தாய், வட்டார குழு செயலாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் அடக்கிவீரன், இராசேசுவரன், கரும்பு விவசாயிகள் சங்க மாநில நிர்வாகி வழக்குறைஞர் பழனிச்சாமி, தமுமுகவின் மாவட்ட துணைச் செயலாளரும் தும்பைப்பட்டி ஊராட்சித் தலைவருமான பாட்டையா (எ) அயூப்கான், மேலூர் தொகுதி தலைவர் சேட் (எ) சையது பகுர்தீன், தொகுதி பொருளாளர் சிராஜுதீன், கிளை நிர்வாகிகள் பொறி.சக்கரை முகமது, முகமது அசாருதீன், முகமது ரபீக், ஹைவே மொபைல்ஸ் ரபீக், சித்திக்,

அபூபக்கர் சித்திக் மற்றும் கருங்காலக்குடி ஊராட்சி மக்கள் நல்வாழ்வுக் குழுவின்  வீரக்குமார், சுப.திருவாசகன், முகமது முபாரக், முகமது ரியாஸ், சுலைமான், செந்தூர் பாண்டியன், அகத்தியன், எரிகாற்று குழாய் எதிர்ப்புக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கதிரேசன் செல்வராஜ், தங்க அடைக்கன், அய்யாபட்டி ஊராட்சி துணைத் தலைவர் நாகூர் ராசா, திமுகவின் ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர் பிரபாகரன், ஒன்றிய திமுக இளைஞரணி அமைப்பாளர் புரோஸ்கான், திமுக மாணவரணி நிர்வாகி சிட்டிபாபு, சமூக ஆர்வலர் இராசாராம் மற்றும் பொதுமக்கள் பெருமளவில் கலந்துகொண்டனர்.

-வெண்புலி, மதுரை.

Comments