இறந்தவர் பேங்க்குக்கு வந்த அதிசயம்!!! மகன்கள் செய்த அட்டூழியம்???

   -MMH

    தர்மபுரி மாவட்டத்தில் அமைந்துள்ளது அண்ணாமலைபட்டியில் வசித்து வருகிறார் 75 வயதான முருகேசன். இவரது மனைவி சுசிலா.

இவர்களுக்கு 40 வயதான செல்வன், 35 வயதான சதாசிவம் , 27 வயதான மாதையன் என 3 மகன்களும் செந்தாமரை என்ற மகளும் உள்ளனர்.

முருகேசனுக்கு அண்ணாமலைப்பட்டி கிராமத்தில் 2 வீடுகள் உள்ளன. இவற்றின் இன்றைய மதிப்பு 2.5 கோடி. பிள்ளைகள் அனைவரும் இந்த வீடுகளை தங்கள் பெயருக்கு பத்திரம் எழுதி கொடுக்க வேண்டும் என முருகேசனை தொந்தரவு செய்து வந்தனர். ஆனால் முருகேசன் அதற்கு சம்மதிக்கவில்லை.

ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த, செல்வம் மற்றும் சதாசிவம் இருவரும் வீடுகளை தங்களது பெயருக்கு எழுதி கொடுக்காவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்து போன முருகேசன், வீட்டை விட்டு வெளியேறி தலைமறைவாக வாழ்ந்து வந்தார்.

இதற்காக முருகேசன், தன்னுடைய பெயரில் தர்மபுரி மாவட்டம் கம்பைநல்லூரில் உள்ள வங்கியில் போட்டு வைத்திருந்த 1.5லட்சம் ரூபாய் பணத்தை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வங்கி அதிகாரிகள், “உங்க அக்கவுண்ட்டில் உள்ள பணத்தை நீங்கள் இறந்துவிட்டதாகச் சொல்லி இறப்பு சான்றிதழ் தந்து, உங்கள் மகன்கள் அக்கவுண்ட்டை முடித்துவிட்டு சென்று விட்டனர்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதைக்கேட்டு அதிர்ந்து போன முருகேசன், மகன்களின் நடவடிக்கைகளை அவர்களுக்கு தெரியாமல் விசாரித்ததில் அவர்கள் 2 கோடியே 50 லட்சம் மதிப்புள்ள தனது சொத்துகளை இறப்பு சான்றிதழ் கொடுத்து அபகரித்துள்ளதையும் கண்டறிந்தார். இது குறித்து முருகேசன் காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கும் பலமுறை புகார் அளித்துள்ளார். ஆனாலும் யாரும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இதனால் கர்நாடகா, ஆந்திரா என பிற மாநிலங்களில் உயிருக்கு பயந்து தலைமறைவாக வாழ்ந்தார். தற்போது கடந்த 3 மாதங்களாக தமிழ்நாட்டில் ஒசூர் அருகேயுள்ள ஒரு கிராமத்தில் ஒரு திண்ணையில் படுத்து தூங்கி, கூலி வேலை செய்து பிழைப்பு நடத்தி வருகிறார். தான் உயிருடன் இருப்பது தெரியவந்தால், இறப்பு சான்றிதழ் வாங்கியவர்கள் நிஜமாகவே, தன்னை கொலை செய்து விடுவார்கள் என வேதனையுடன் சொல்கிறார்.

-N.V.கண்ணபிரான்.

Comments