மணமேடையில் குட்கா மென்றதால் மணமகன் கன்னத்தில் அறை விட்ட மணமகள்! வைரலாகும் காணொலி!

 

-MMH


                திருமண மேடைகளில் நடைபெறும் சில நிகழ்வுகள் அவ்வப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. தற்போது வடமாநில காணொலி ஒன்றில் மணக்கோலத்தில் மணமகனும், மணமகளும் அமர்ந்திருக்கிறார்கள். அப்போது மணமகள், தனக்கருகே அமர்ந்திருப்பவரை திடீரென கோபத்தோடு அடிக்கிறார்.

அப்போது, தடுக்க முயன்ற மணமகனையும் அவர் அடிக்கிறார். பின்னர் மணமகன் எழுந்து சென்று வாயிலிருந்து எதையோ துப்பி விட்டு மீண்டும் வந்து அமர்கிறார். மணமேடையில் இருந்தபோது குட்கா மென்று கொண்டிருந்ததால்தான் மணமகனை அவர் அடித்துள்ளார் என்பதால் யாரும் அவரை தடுக்க முயற்சிக்கவில்லை. இந்த சம்பவத்தை அங்கிருந்த ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி மணமகனை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர். மேலும் பலர் மணமகளின் செயலுக்கு ஆதரவு தெரிவித்தும் சிலர் கண்டனம் தெரிவித்தும் பதிவிட்டு வருகிறார்கள்.

-ராயல் ஹமீது.

Comments