பழைய மாதிரி துர்நாற்றம் வீசும் குப்பை கிடங்காக மாறியது வால்பாறை நிலைமை!!

-MMH

கோவை மாவட்டம் வால்பாறை வட்டார குப்பைக்கிடங்கு மிகவும் மோசமான நிலையில் துர்நாற்றம் வீசிக்கொண்டு உள்ளது. இந்த இடத்தை பலமுறை நகராட்சியில் ஆணையர் இடமும் நகராட்சி குப்பை வாரிய அதிகாரி இடமும் பலமுறை கூறியும் இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. மக்கும் குப்பை மக்கா குப்பை என்று பிரிவினைக்காக டெண்டர் விடப்பட்டது.

இதுவரை எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை இதை பலமுறை நாங்கள் அதிகாரிகளிடம் கூறியும் அவர்கள் காலங்களில் சற்று தாமதமாகத்தான் முடியும் என்று கூறியுள்ளார்கள். அப்பகுதியில் வாகனம் நிறுத்துவதற்கு இடையூறாக உள்ளது. பொதுமக்கள் நடப்பதற்கும் அவ்வழியில் செல்வதற்கும் இடையூறாக உள்ளது. 

இதனை கண்டு உடனே அப்பகுதியில் சரி செய்ய வேண்டுமாய் வால்பாறை வட்டாட்சியர் நகர ஆட்சியர் தூய்மைப் பணியாளர்களிடம் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கை எடுக்க வில்லை. ஆகையால் உடனே நடவடிக்கை எடுத்து அப்பகுதியை தூய்மைப்படுத்த வேண்டுமாய் பொதுமக்களும் வாகன ஓட்டுநர்களும் கோரிக்கை விடுத்துள்ளோம்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-திவ்ய குமார், செந்தில்குமார், வால்பாறை.

Comments