திருப்பூர் சுற்றிவளைக்கப்பட்ட கார், சினிமா பாணியில் அரங்கேறிய சேசிங் நிகழ்வு..!!

 

-MMH

   திருப்பூரில் தனது மகன், மருமகள் மற்றும் பேத்தி ஆகியோருடன்  தங்கி  சேலை வியாபாரம் செய்து வரும் வியாபாரியின் மனைவியும், பேத்தியும் சென்ற சான்ட்ரோ  கார் சினிமா பாணியில் அடையாளம் தெரியாத நபர்களால் சேசிங்  செய்யப்பட்டு சுற்றிவளைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

சேலை வியாபாரியின் மகன் சவுண்டப்பன்  மருமகள் திவ்யா, பேத்தி பிரஜன்னா . சம்பவத்தன்று நேற்றுக்காலை சவுண்ட்ப்பனுக்கு  சொந்தமான சான்ட்ரோ  காரில் பாக்கியா, பேத்தி பிரஜன்னா ஆகியோர்  தாராபுரத்தில் உள்ள தங்கள் உறவினர் வீட்டிற்கு சென்றுவிட்டு அங்கு மதிய உணவை முடித்துக்கொண்டு வீடு திரும்பி கொண்டிருந்தனர். காரை ஓட்டி வந்தவர்  சவுண்டப்பன்  வீட்டிலேயே குடியிருக்கும் சக்தி என்னும் கார் டிரைவர்.

இவர்களின் கார் பல்லடம் அருகே வந்து கொண்டிருந்த பொழுது ஆடி, சைலோ, மாருதி ஷிப்ட் ஆகிய மூன்று கார்களில் வந்த மர்ம நபர் அடங்கிய கும்பல் பாக்கிய பிரஜன்னா பயணித்த காரை பின் தொடர்ந்தபடியே வந்துள்ளனர். திடீரென்று வேகத்தைக் கூட்டி முண்டியடித்து வந்த கார்கள் சான்ட்ரோ காரை சுற்றி வளைக்க  திட்டமிட்டு முயன்று இருக்கின்றன. 

இந்த எதிர்பாராத  ஆபத்தை உணர்ந்த டிரைவர் சக்தி சற்று உஷாராகி காரை மாற்றுப்பாதையில், கோவை நெடுஞ்சாலையில் இயக்கியுள்ளார் அந்த கும்பலும் விடாமல் இவர்களை விரட்டிச் சென்று பெரும்பாலை என்ற இடத்தில் சான்ட்ரோ காரை  மர்ம நபர்கள் வந்த கார் சுற்றி வளைத்தது. மூன்று காரிலிருந்து இருந்து திபுதிபுவென இறங்கிய மர்ம கும்பல் தங்களைப் போலீஸ் என்று அறிமுகம் செய்து கொண்டு  டிரைவர் சக்தியை காரிலிருந்து அடித்து தரதரவென இழுத்து சென்றனர். சினிமா பாணியில் அரங்கேறிய இச்சம்பவம் திருப்பூர் மக்களை  கதிகலங்கச் செய்துள்ளது.

நாளைய வரலாறு செய்திக்காக, 

-பாஷா, திருப்பூர்.

Comments