பொள்ளாச்சி அருகே மலைத்தேனீ கொட்டியதில் சம்பவ இடத்திலேயே ஒருவர் உயிரிழப்பு!!

   -MMH

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மீன்கரை சாலை அம்பராம்பாளையம் அருகே ஆற்றங்கரையோரம்  இறந்தவருக்கு திதி கொடுப்பதற்காக உறவினர்கள்  கூடியிருந்தனர். அப்பொழுது மலைத் தேனீக்கள்  கூட்டமாக ரீங்காரத்துடன் அதிவேகமாக வந்ததைக் கண்டு உறவினர்கள் சிதறி ஓடினர்.

இருப்பினும் மலைத் தேனீ கொட்டியதில் குரும்பபாளையம் கறிக்கடை நடத்திவரும் ரமேஷ் வயது (30) மயங்கிக் கீழே விழுந்தார். இவரை மீட்டு மருத்துவமனை  எடுத்து செல்வதற்குள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் 11 பேர் காயங்களுடன் தனியார் மருத்துவமனையிலும்  மற்றும் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையிலும் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றனர் .

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியதோடு திதி கொடுக்க வந்த இடத்தில் ஒருவர் இறந்தது மிகுந்த வேதனை அளிப்பதாக அப்பகுதி பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். 

-M.சுரேஷ்குமார். , தமிழகத் 

துணை தலைமை நிருபர்.

Comments