இருசக்கர வாகனத்தில் ஸ்டைலான எழுத்துக்கள், பெயர்கள், படங்கள் இருந்தால் 100 ரூபாய் அபராதம்! - காவல்துறை எச்சரிக்கை!!

      -MMH

    இருசக்கர வாகனத்தில் ஸ்டைலான எழுத்துக்கள், பெயர்கள், படங்கள் இருந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை.

தமிழகத்தில் பொதுவாக வாகனத்தின் நம்பர் பிளேட் அனைத்தும் மோட்டார் வாகன சட்ட விதிமுறைப்படி அமைக்காமல் பல்வேறு அளவுகளில் பொருத்தப்பட்டு வருகிறது. நம்பர் பிளேட்டில் பின்பற்றப்பட வேண்டிய நிறம், தகட்டின் அளவு, எழுத்து மற்றும் எண் ஆகியவற்றின் அளவு, இடைவெளி குறித்த விதிமுறைகள் அனைத்தும் வாகன ஓட்டிகள் கட்டாயம் பின்பற்ற வேண்டும். ஒரு வேலை அவ்வாறு பின்பற்றவில்லை என்றால் காவல் துறை நடவடிக்கை எடுக்கும்.

கடந்த 2019 ஏப்ரல் 1ம் தேதிக்கு பின் புதியதாக வாகனப்பதிவு செய்யும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்பு நம்பர் பிளேட் பொருத்தப்பட வேண்டும். இதனை மீறுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும், என போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி அணைத்து இருசக்கர வாகனங்களின் பின்பக்க நம்பர் பிளேட்டின் எழுத்தின் உயரம் 35mm அகலம் 7mm நம்பரின் இடைவெளி 5mm இருக்க வேண்டும்.

மேலும், வாகனத்தின் நம்பர் பிளேட் ஃபேன்சியாக, ஸ்டைலான எழுத்துக்கள் மற்றும் பெயர்கள், படங்கள் இருந்தால் 100 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர். எனவே வாகன உரிமையாளர்கள் அனைவரும் வாகன பதிவு எண்களை அங்கீகரிக்கப்பட்ட வடிவில் மட்டுமே பொருத்த வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

-சுரேந்தர்.

Comments