கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது!!

   -MMH

   கோவை கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் 150-ஆவது பிறந்த நாள் விழாவினை முன்னிட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அமைந்துள்ள, அவர்  இழுத்த செக்குக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 5ஆம் தேதி கப்பலோட்டிய தமிழன் வ.உ சிதம்பரனாரின் பிறந்த நாள் விழா தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதேபோல் இந்தாண்டும் அவரின் 150-ஆவது பிறந்தநாளை ஒட்டி கோவை மத்திய சிறைச்சாலையின் முகப்பில் அமைந்துள்ள, வ.உ.சிதம்பரனார் இழுத்த செக்குக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கோவை மாநகர மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.தனபால் தலைமையில்மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 

மேலும் அங்குள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை அளிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் மாநகர துணை தலைவர் பொன்னுசாமி, தலைமை நிலைய செயலாளர் வடிவேல், ஒருங்கிணைந்த மாவட்ட விவசாய அணி செயலாளர் கனகரத்தினம், தீரன் தொழிற்சங்க மாவட்ட தலைவர் ஆறுச்சாமி, மாணவரணி செயலாளர் விஜயகுமார் இளைஞரணி செயலாளர் பூபதி வர்த்தக அணி செயலாளர் விஜயகுமார், மகளிர் அணி செயலாளர் கிருஷ்ணவேணி, சூரியகலா மாவட்ட ஐடி விங் செயலாளர் மணிகண்டன், ஒருங்கிணைந்த மாவட்ட ஐடி விங் செயலாளர் பசுமை சந்தோஷ், ஐந்தாவது பகுதி தலைவர் ஆறுமுகம் உள்ளிட்ட  நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

நாளைய வரலாறு செய்திக்காக,

- சீனி,போத்தனூர்.

Comments