கேரளாவில் நிபா வைரஸ் தாக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் மேலும் 2 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது !!

-MMH

   கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுவன் பலியான நிலையில் மேலும் இரண்டு பேருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இருவரையும் தனி வார்டில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் நிபா வைரஸ் மேலும் பலரை பாதித்திருக்கலாம்   என்ற அச்சம் நிலவி வரும் நிலையில் இறந்து போன சிறுவனின்  தொடர்பில் இருந்த 188 பேரின் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது இதில் நெருங்கிய தொடர்பில் இருந்த 20 பேருக்கு முதற்கட்டமாக  பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்தப் பரிசோதனை முடிவில் நிபா வைரஸ் தாக்கம் வரும் காலத்தில் எப்படி இருக்கும் என்ற கேள்விக்கு விடை கிடைக்கும்.

-M.சுரேஷ்குமார்.


Comments