தமிழகம் முழுவதும் ஒரே இரவில் 560 ரவுடிகள் கைது!!

   -MMH

தமிழகம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னை, தமிழ்நாட்டின் டிஜிபியாக சைலேந்திரபாபு பொறுப்பேற்றதில் இருந்து பல்வேறு முக்கிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். முக்கியமாக ரவுடியிசம், கட்டப்பஞ்சாயத்தை ஒழிக்க வேண்டும் என்பதற்காக தீவிரமாக திட்டங்களை வகுத்து வருகிறார். டிஜிபியாக பொறுப்பேற்றதில் இருந்து சைலேந்திரபாபு பாதுகாப்பு நடவடிக்கைகளில் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்.

கடந்த சில நாட்களாக தமிழ்நாட்டில் ஆங்காங்கே சில குற்றச்செயல்கள் நடைபெற்றன. நேற்று முதல் நாள் இரவு திண்டுக்கல்லில் அடுத்தடுத்து இரண்டு கொலை சம்பவங்கள் நடைபெற்றன. கடந்த வாரம் திருநெல்வேலியில் போலீசார் ஒருவரின் தம்பி ரவுடிகள் கும்பலால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். அதேபோல் தேனி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களிலும் சில கேங்க் மோதல்கள், பழிவாங்குவதற்காக செய்யப்பட்ட கொலைகள் அரங்கேறின. இந்த நிலையில் தற்போது ரவுடியிசத்தை மொத்தமாக ஒழிக்கும் வகையில் முக்கியமான ஆபரேஷனை நேற்று இரவோடு இரவாக தமிழ்நாடு போலீசார் செய்துள்ளனர். தமிழ்நாடு முழுக்க பல்வேறு மாவட்டங்களில் நேற்று இரவு, இன்று அதிகாலை போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி உள்ளனர். சென்னை, மதுரை, திண்டுக்கல், நெல்லை, தேனி, கோவை என்று பல மாவட்டங்களில் இந்த ரெய்டு நடத்தப்பட்டு இருக்கிறது. 

தமிழகம் முழுவதும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ஒரே இரவில் அதிரடியாக 560 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 700 இடங்களில் நடந்த சோதனையில் 70 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். கஞ்சா, மாவா பொட்டலங்களும் சிக்கின. தமிழகம் முழுவதும் கைதான ரவுடிகளிடம் இருந்து 256 அரிவாள், கத்திகள், 3 துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல குற்றச்செயல்களில் தேடப்பட்டு வந்தவர்கள், சந்தேக கேஸ்களாக இருந்தவர்கள், பெயிலில் வெளி வந்துவிட்டு வேறு ஊர்களுக்கு ஓடி சென்றவர்கள் என்று பலர் மொத்தமாக கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு போலீஸ் மேற்கொண்ட ஆபரேஷன்களில் பெரிதாக ஆபரேஷனாக இது பார்க்கப்படுகிறது. டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின்பேரில் ரவுடிகளின் அராஜகத்தை ஒழிக்க போலீசார் ரெய்டு நடத்தியதாக உயர் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

-வேல்முருகன், சென்னை.

Comments