கோவையில் எல்ஐசி 66வது ஆண்டு விழா!!

  -MMH

   கோவையில் எல்ஐசி 66வது ஆண்டு விழா. 

பொதுப்பணித்துறை நிறுவனமான எல்ஐசி நிறுவனத்தின் 66ம் ஆண்டு விழா இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை திருச்சி சாலையில் உள்ள எல்ஐசி அலுவலகத்தில் 66ம் ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட ஊழியர்கள் இந்நிறுவனத்தை 100% அரசு நிறுவனமாக தொடர வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் 'எல்ஐசி பங்கு  விற்பனை தேசவிரோதம், எல்ஐசியை வலுபடுத்துவோம் தேசம் காப்போம், இன்சூரன்ஸ் பரவலை 100% ஆக்கியது பொதுத்துறை எல்.ஐ.சி. , இந்திய நாடும் பொதுத்துறை நிறுவனமும் மக்கள் சொத்து. பொதுத்துறை எல்ஐசி மட்டுமே இந்தியாவின் பொருளாதாரம்' போன்ற பதாகைகளை ஏந்தியவாறு உறுதி கொண்டனர். 

இது போன்று பல்வேறு செயல்களை செய்து வரும் பொதுத்துறை எல்ஐசி அரசு நிறுவனமாகவே தொடர வேண்டுமென அரசிற்கு கோரிக்கை வைத்தனர்.

- சீனி,போத்தனூர்.

Comments