மாநில நல்லாசிரியா் விருதிற்கு சிவகங்கை மாவட்டத்தில் 9 ஆசிரியா்கள் தோ்வு! மாணவர்கள் மகிழ்ச்சி!

 

-MMH

     செப். 5 ஆசிரியா் தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரிய, ஆசிரியைகள் தேர்வு செய்யப்பட்டு தமிழ்நாடு அரசின் சாா்பில், டாக்டா் ராதாகிருஷ்ணன் விருது வழங்கப்படுகிறது. அதன்படி, இந்த ஆண்டு (2021) வழங்கப்படும் விருதுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ம.கணேசன், திருக்களாப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் ப.வடிவேல், திருப்புவனம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி உடற்கல்வி இயக்குநர் கரு.க.வேங்கடமோகன், இளையான்குடி மேல்நிலைப் பள்ளியின் உடற்கல்வி இயக்குநர்,

என்.இ.என்.இப்ராஹிம்ஷா, கண்டனூர் சிட்டாள் ஆச்சி நினைவு தொடக்கப்பள்ளியின் இடைநிலை ஆசிரியர் ஆ.அன்பழகன், காவதுகுடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியை சுப.வைரம்மை, கருப்பூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் இரா.ஸ்டீபன், காரைக்குடி இராமநாதன் செட்டியார் நகர் மன்ற தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை தி.சாவித்திரி, காரைக்குடி மகரிஷி வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியை ஆசிரியை ஜா.ச.புனிதா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 9 ஆசிரியர்களுக்கும் சிவகங்கை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் தமிழக ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் கே.ஆா்.பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி ஆகியோா் இன்னும் ஓரிரு தினங்களில் நல்லாசிரியா் விருதுகளை வழங்குவா் என முதன்மைக் கல்வி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.

Comments