நாளை முதல் புரட்டாசி மாதம் தொடக்கம் புருஷோத்தமனின் மாதம் என்பதால் இந்த மாதம் சிறப்பு பெறுகிறது !

 

-MMH
           காக்கும் தெய்வமான மகாவிஷ்ணுவுக்கு உரிய மாதமாகப் போற்றப்படும் புரட்டாசியில் கோவிந்தா கோவிந்தா  என்று பக்தர்கள் கூறும் பகவான் நாமம் எங்கெங்கும் எதிரொலிக்கும்.  புண்ணிய மிக்கதான புரட்டாசி மாதத்தில் புருஷோத்தமனை வழிபடுவது போலவே மேலும் பல சிறப்பினான விரதங்கள் அடங்கிய மாதமே இந்த புரட்டாசி மாதம். 

மஹாய பட்சம், மஹாளய அமாவாசை,புரட்டாசி சனிக்கிழமை, புரட்டாசி ஏகாதசி, புரட்டாசி திருவோணம், திருவேங்கடவன் திரு அவதாரத் தினம் என்று இம்மாதம் முழுவதுமே வேங்கடவனின் வழிபாட்டிற்கு ஏற்ற மாதமாகும்.  தன்னையே நம்பி சரணாகதி அடைந்தவர்களின்  துன்பத்தை தீயினால் தூசாகும் என்பதை போல் காக்கும் பகவானான ஸ்ரீ ஸ்ரீமந் நாராயணன் விரைந்து வந்து அருளக்கூடியவன்.

புரட்டாசி மாதம் முழுவதுமே மாதவனுக்குரிய மாதம் தான் அதனால் தான் இதனை  பெருமாள் மாதம்  என்றே அழைப்பர். இந்த புண்ணிய மாதம் முழுவதுமே தீனதயாளனை பக்தர்களின் குரலுக்கு ஓடி வந்து அபயம் அளிப்பவரை பாம்பணையில் பள்ளி கொண்டுள்ளவரை வணங்கி விரதம் இருப்போம் அவரது அருளால் நாம் அறியாமல் புண்ணியங்களை ஈட்டுவோம். 

ஆன்மீக சிந்தனையாளர், 

-திருமதி சுகன்யா சுரேஷ்.

Comments