கோவை மாவட்டத்தில் தொடரும் ரேஷன் அரிசி கடத்தல்! கண்டும் காணாமல் போகும் அதிகாரிகள்! நடவடிக்கை எடுப்பார்களா உயர் அதிகாரிகள்!!

  -MMH

   கோவை மாவட்டம் பொள்ளாச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து நாள்தோறும் கேரளாவுக்கு தமிழக ரேஷன் அரிசி அதிக அளவில் கடத்தப்பட்டு வருகிறது.

இந்த ரேஷன் அரிசி கடத்தல் காரர்களை கண்டும் காணாமலும்,  பார்த்தும் பார்க்காமலும், தட்டிக் கேட்க முடியாமல் அதிகாரிகள் சென்று விடுகின்றனர்.  இதனால் அரிசி கடத்தல்காரர்கள் பயமின்றி அச்சமின்றி அரிசி கடத்தலில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த அரிசி கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மாதம்தோறும் சில அதிகாரிகளுக்கு பல லட்ச ரூபாய் லஞ்சம் கொடுப்பதாக நம்பகத்தன்மை உள்ள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் பொள்ளாச்சி அடுத்த வஞ்சியபுரம் பிரிவு அருகே காரில் அரிசி மூட்டைகள் பதித்து வைத்திருப்பதாக உணவு கடத்தல் பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்ததாக கூறி விரைந்து சென்று பரிசோதனை செய்தனர் அப்பொழுது அந்த காரில் 20 மூட்டைகளில் ஒரு டன் ரேஷன் அரிசி இருந்தது அதை பறிமுதல் செய்த அதிகாரிகள் காரின் பதிவு எண்ணை வைத்து கடத்தலில் ஈடுபட்ட நபர்களை தேடி வருகின்றனர்.  இவர்களைத் அதிகாரிகள்  தேடிப் பிடிப்பார்களா...? பிடிக்க  மாட்டார்களா...?என்ற கேள்விகள் ஒருபுறம் இருக்க,

அரிசி கடத்தலில் நாள்தோறும் தவறாமல் ஈடுபட்டுவரும் பொள்ளாச்சி அடுத்த ஆனைமலை பெரியபோது பகுதியைச் சேர்ந்த ஈஸ்வரியை அடையாளம் தெரிந்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் இருக்க என்ன காரணம் என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்  

சமூக ஆர்வலர்களின் கேள்விக்கு அதிகாரிகளின் பதில் என்னவாக இருக்கும் என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

நாளைய வரலாறு செய்திக்காக,

-M.சுரேஷ்குமார், தமிழகத் துணை தலைமை நிருபர்.


Comments