சிங்கம்புணரி அருகே மணியாரம்பட்டி பேருந்து நிறுத்தத்தில் மது விற்பனை! ஒருவர் கைது!

-MMH

    சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகா, எஸ்.புதூர் அருகே மணியாரம்பட்டி பகுதியில் உலகம்பட்டி காவல்நிலைய சார்பு ஆய்வாளர் மாரிமுத்து தலைமையிலான காவல்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, உரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுப்பிரமணியன் மகன் செல்வராஜ் (வயது 38) மணியாரம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சட்ட விரோதமாக மது விற்பனை செய்து வந்தது தெரியவந்தது. அதனைத் தொடர்ந்து 14 மதுபாட்டில்களுடன் செல்வராஜை கைது செய்த உலகம்பட்டி காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

-அப்துல்சலாம், திருப்பத்தூர்.

Comments