கோவையில் மாபெரும் மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கி பாராட்டுகளை பெற்றிருக்கிறார் ஆட்சியர் சமீரன்!!

  -MMH

    கோவை: பருவமழையை எதிர்கொள்ளும் முகமாக கோவையில் மாபெரும் தூய்மை பணி முகாமை தொடங்கி பாராட்டுகளை பெற்றிருக்கிறார் ஆட்சியர் சமீரன்.

வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும் வகையில் அனைத்து விதமான நடவடிக்கைகளுக்கு கோவை நகரம் முழு வீச்சில் தயாராகி வருகிறது. அதற்காக தமிழ்நாடு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை மூலமாக மாபெரும் தூய்மை பணி முகாம் தொடங்கப்பட்டு இருக்கிறது.

தமிழகம் முழுவதும் துவங்கினாலும் கோவையில் அதன் பணிகள் வேகம் எடுத்துள்ளது கவனிக்கத்தக்க ஒன்று. கோவை மாநகராட்சியில் 50 கிமீ சுற்றளவுக்கு 81வது வார்டு உள்ளிட்ட பல பகுதிகளில் தூய்மை பணி ந்று தொடங்கி இருக்கிறது.

மொத்தம் 5 நாட்களுக்கு இந்த தூய்மை பணி முகாம் நடத்தப்பட உள்ளது. மொத்தம் 1500 பணியாளர்கள் இந்த பணிகளுக்காக களம் இறங்கி இருக்கின்றனர். இது குறித்து ஆட்சியர் சமீரன் பேசியதாவது:

தற்போது எடுக்கப்பட்டுள்ள இந்த நடவடிக்கை வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டதாகும். அனைத்து கால்வாய்களும் தூர்வாரும் பணியும் ஒரு பக்கம் நடைபெற்று வருகிறது.

மாநகராட்சியில் மட்டும் 1500 கிமீ கால்வாய்களில் முதல் கட்டமாக 50 கிமீ கால்வாய்கள் தூர்வாரப்படும். மழை நீர் தேங்கி ஏற்படுத்தும் சிரமத்தை தவிர்க்கும் பொருட்டு கால்வாய்கள் தூர் வாரப்படுகிறது என்று அவர் கூறினார். மற்ற மாவட்டங்களை விட கோவையில் இந்த பணிகள் வேகம் எடுத்துள்ளதால் கலெக்டருக்கு மக்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

-சுரேந்தர்.

Comments